×

தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லாத முழு பொது முடக்கம்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பத்துள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலின் அடிப்படையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. அந்த வகையில் 7 ஆம் கட்ட ஊரடங்கு நாளையும் முடிவடைய உள்ள நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஊரடங்கு நீடிப்பு, பொது போக்குவரத்து கட்டுபாடுகளுடன் ஆரம்பிப்பது என மருத்துவ வல்லுனர் குழு, மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பத்துள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலின் அடிப்படையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

அந்த வகையில் 7 ஆம் கட்ட ஊரடங்கு நாளையும் முடிவடைய உள்ள நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஊரடங்கு நீடிப்பு, பொது போக்குவரத்து கட்டுபாடுகளுடன் ஆரம்பிப்பது என மருத்துவ வல்லுனர் குழு, மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று எந்தவித தளர்வும் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் இன்று முழுவதும் மூடப்பட்டுள்ளது.