சினிமாவை மிஞ்சிய சேஸிங்- கார் மேல் படுத்தபடி சென்ற காவலர்!
கோவையில் போலீசாரின் சோதனையை மீறி மின்னல் வேகத்தில் கார் ஒன்று சென்றது. அதனை தடுத்து நிறுத்த முயன்ற காவலரை சுமந்தபடி பல கிலோ மீட்டர் தூரம் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோவை கோவில்பாளையம் அருகே செக்போஸ்டில் இன்று காலை போலீசார் சோதனைக்காக வெள்ளை நிற காரை (KA05 MG 7692) நிறுத்த முயன்றபோது, காரில் இருந்த கும்பல் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றது. மப்டியில் இருந்த தலைமை காவலர் வேல்முருகன் சுதாரித்து காரின் மேற்கூரை மீது ஏறிய நிலையில், கும்பல் காரை நிறுத்தாமல் அவிநாசி மெயின் ரோடு, கணியூர் டோல்கேட் என வேகமாக சென்றுள்ளது.
கோவை - போலீசாரின் சோதனையை மீறிச் சென்ற கார்... தடுத்து நிறுத்த முயன்ற காவலரை சுமந்தபடி சென்ற கார்... காரின் மீது படுத்தபடி பல கிலோ மீட்டர் தூரம் சென்ற காவலர்#Coimbatore | #Police | #Car | #PolimerNews pic.twitter.com/fIuNQ7gmEo
— Polimer News (@polimernews) September 27, 2026
சில கிலோ மீட்டர் தூரம் உயிரை பணயம் வைத்து கார் மேல் படுத்தபடி பயணித்த அந்த துணிச்சல் மிகு காவலரின் செயலால், ஒருவழியாக அவிநாசி பகுதியில் கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது. சோதனையில் காரில் 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. ராஜஸ்தான் கும்பலைச் சேர்ந்த 2 பேர் சிக்கினர், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உயிரை துச்சமென நினைத்து கடமையாற்றிய அந்த தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.