×

ஒரு கையில் செல்போன்... மறு கையில் ஸ்டேரிங்... செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிய டிரைவர்..!! 

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஓட்டுநர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/vplaf371bTQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/vplaf371bTQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">