பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு..!
Mar 21, 2026, 17:54 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், எந்த அரசியல் கட்சி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. உத்தரமாசமங்கை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, த.வெ.க ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறுவர்களை ஈடுபடுத்தி திமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மலர்விழி மற்றும் அவருடன் தொடர்புடைய சில நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.