விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு - எம்எம்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக ப.விடுதலை சிகப்பி மீது பாஜக 'நாராயணன்' சொல்லி சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயாத சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.