ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடிய கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்
Dec 24, 2025, 16:19 IST
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்திய கார் திடீரென ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் தனியார் நிறுவன கார் ஷோரூம் உள்ளது. அங்கு புதிய கார் வாங்கச் சென்ற வாடிக்கையாளருக்கு ஷோரூம் ஊழியர் ஒருவர் காரில் ஏறி சோதனை ஓட்டம் காட்டியுள்ளார். அப்போது திடீரென கார் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு 20 அடி தூரம் சென்று சாலையை கடந்து எதிர் புறத்தில் நின்றது.