×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னப்பிரசாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு! 

 

திருப்பதி கோயிலில் அன்னப்பிரசாதம் சாப்பிட வந்து சுயநினைவு இழந்த சிறுவன் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இந்த மாதம் 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவைச் சேர்ந்த மஞ்சுநாதா என்ற சிறுவன் குடும்பத்தினருடன் திருமலை மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்திலிருந்து இரவு உணவு அருந்தினார். பின்னர்  வெளியே வரும்போது திடீரென மயங்கி விழுந்தான்.  அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்று சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்நாதாவை திருப்பதியில் உள்ள சுவிம்ஸ்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  சிகிச்சை பலனின்றி   இறந்துவிட்டான். மேலும்  மஞ்நாதா நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டான் அதற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்  திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக  இறந்ததாக கூறப்படுவதில் உண்மையல்லை  தவறான  செய்திகளை,  தகவல்களைப் பரப்பி பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.