×

’28 ஆவது முறையாக’.. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்!

தூத்துகுடியை சேர்ந்த யாசகர் ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை ரூ.2.80 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கிய காலக்கட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு நிதி திரட்டின. லட்சக் கணக்கில் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்கும் நிதி குவிந்தது. அந்த சமயத்தில் தான் பிச்சை எடுக்கும் ஒருவர் அரசுக்கு நிதி வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பிச்சை எடுத்து
 

தூத்துகுடியை சேர்ந்த யாசகர் ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை ரூ.2.80 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கிய காலக்கட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு நிதி திரட்டின. லட்சக் கணக்கில் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்கும் நிதி குவிந்தது. அந்த சமயத்தில் தான் பிச்சை எடுக்கும் ஒருவர் அரசுக்கு நிதி வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பிச்சை எடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வீதம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சுதந்திர தின விழாவின் போது இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட நிர்வாகம் பெருமை படுத்தியது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் நிதி வழங்கும் சேவையை தொடருகிறார் பூல் பாண்டியன். நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28ஆவது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.