×

பிரமாண்ட திருமண வரவேற்பால் வாழ்க்கையே முடிந்த சோகம்... மாடல் அழகி தற்கொலை

 

திருமண வரவேற்புக்கு பல லட்சம் வரை கடன் பெற்று அதில் திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், 50 ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்ட மயங்கிய‌ புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் சான் ரேச்சல்(25). மாடல் அழகி. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி, சுமார் 50 ரத்த அழுத்த மாத்திரைகளை சான் ரேச்சல் சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு அவரது உடல் நிலை மோசமானதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை எடுத்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், கடந்த மாதம் மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எழுதியிருந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. நான்தான் முடிவு எடுத்து தற்கொலை செய்துள்ளேன் என்று எழுதியிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது விசாரித்தபோது அவர், காதல் திருமணம் புரிந்துள்ளார். திருமணத்தை அவர் வீட்டில் ஏற்காத நிலையில் தனது குடும்பத்தினர் செலவு செய்ததுபோல் பல‌ லட்சம் வரை கடன் பெற்று வரவேற்பு நிகழ்வு நடத்தியுள்ளார். கடன் திருப்பி செலுத்த உதவி கிடைக்கவில்லை. மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்று அதிக மாத்திரை சாப்பிட்டார். அதைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்து மரணம் அடைந்துள்ளார் என்றனர்.