×

கண்மாய் தண்ணீரில் மூழ்கி 6 வயது சிறுமி பலி

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்ற 6 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் செங்கல் சூளை சவுடு மண் அள்ளுவதற்காக கண்மாயில் 10 அடி ஆழம் தோண்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் ஏற்கனவே மண் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி அப்பகுதிக்கு சென்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் கவிநிஷா (6) என்பவர் கண்மாய் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். அப்பொழுது வழுக்கி கண்மாய் பகுதிக்குள் இருந்த பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சிக்கல் போலீசார் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.