அசுரவேகத்தில் பறந்த காவலரின் கார்... சாலையோரம் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த 5 வயது குழந்தை பரிதாப பலி
திருவள்ளுர் அருகே தலைமை காவலர் ஓட்டிச் சென்ற கார் மோதி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திய காவலரை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (32). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா (28) என்ற மனைவியும் தானிகா சாரா (5) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ரம்யா திருவள்ளூரில் தனியார் வங்கியில் புணிபுரிந்து வருகிறார். இவர் இன்று தன்னுடன் பணிபுரியும் திருநின்றவூரைச் சேர்ந்த குணசேகரன் (35) என்பவருடன் திருநின்றவூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி குழந்தை தானிகா சாராவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருப்பதி புறவழிச்சாலையில் அயத்துார் அருகே சிறுமி வாந்தி எடுக்கவே நெடுஞ்சாலையோரம் வாகனத்தை நிறுத்தியிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாருதி எர்டிகா கார் திடீரென நிலைதடுமாறி நெடுஞ்சாலை ஓரம் நின்றுக் கொண்டிருந்த குணசேகரன் மற்றும் குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தை தானிகா சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த குணசேகரன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கு குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை இயக்கியது வந்ததது திருநின்றவூரைச் சேர்ந்தவரும், செவ்வாப்பேட்டை காவல் நிலையயத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் விக்ரமன் என்பது தெரிய வந்தது. இவர் காரில் குடும்பத்துடன் திருவாலங்காடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய விக்ரமனை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய் போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திருந்த நிலையில் நீதிபதி அவரை 30 நாட்கள் நீதிமன்றத்தில் கையெழுத்திடமாறு கூறி சொந்த ஜாமினில் விடுவித்தார்