×

நாய் குறுக்கே வந்ததால் பெரும் விபத்து! 4 வயது குழந்தை பலி

 

ஆரணியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நாய் குறுக்கே வந்து விபத்தில் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணி அருகே முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி கார்த்திக் தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு தங்கமித்ரா(6) அனாமிகா(4) 2மகள்கள் உள்ளனர். மேலும் இளைய மகள் அனாமிகாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மந்திரம் போடுவதற்காக நெசவு தொழிலாளி தனது இருசக்கர வாகனத்தில் அனாமிகாவை அழைத்து சென்றுள்ளார். மேலும் ஆரணி டவுன் கொசப்பாளையம் அரசமரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடிரென நாய் குறுக்கே வந்து நுழைந்துள்ளன. இதில் எதிர்பாரதவிதமாக கார்த்தி மற்றும் குழந்தை அனாமிகா கீழே விழுந்தனர். அப்போது அனாமிகாவிற்கு தiயில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அனாமிகாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் திடிரென அனாமிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.