×

கனியாமூர் கலவரத்தில் போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்திய இளைஞர் கைது

 

கனியாமூர் கலவரத்தின் போது காவல்துறை வாகனத்தை அடித்து உதைத்து சேதப்படுத்திய வாலிபரை கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் கலவரத்தின் போது காவல்துறையினரின் வாகனத்தை அடித்து உதைத்து சேதப்படுத்தியதாக கடலூர் மாவட்டம் சிறுகிராமம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவரை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர். 

காவல்துறை வாகனத்தை அடித்து உதைத்து சேதப்படுத்திய குற்றவாளியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். தொடர்ந்து கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு வீடியோ ஆதாரங்களை கொண்டு போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.