×

"தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது" - பேரவையில் சட்ட மசோதா தாக்கல்!

 

2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் அமர முடியாது என்ற சட்ட திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.  அரசு மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் நூறு சதவீதம் பணி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஆள் சேர்ப்பு முகமை மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பானது,  கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது . கடந்த ஆண்டு டிசம்பர் கொண்டுவரப்பட்ட அரசாணை செயல்படும் வகையில் சட்ட மசோதாவை அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.