×

 நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. 

 

நர்சிங் , ஃபார்மசி  உள்ளிட்ட  மருத்துவம் சார்ந்த துணைநிலை படிப்புகளில் சேர இன்று முதல்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்  19 அரசுக் கல்லூரிகள், 4 சுயநிதி கல்லூரிகள் என 23 கல்லூரிகளில்  உள்ளன.  இதில் 19 அரசு கல்லூரிகளில் 2,536 இடங்களும், 4 சுயநிதி கல்லூரிகளில் 22,200 இடங்களும் என 24,736 இடங்கள்  உள்ளன. இவற்றில்  14,157 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருந்து வருகின்றன. அத்துடன்  தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த அரசு இடங்களின் எண்ணிக்கை 16,693ஆக உள்ளது.
 
இவை தவிர  டிப்ளமோ நர்சிங் படிப்பு 25 அரசு கல்லூரிகளில் உள்ளது. இதில் 2,060 மாணவர்களுக்கான இடங்களும், இதர 27 துணைநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்காக அரசு கல்லூரிகளில் 8, 596 இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆகையால்,  துணைநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக மட்டுமே மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டுமே 27,000 இடங்களுக்கு மேல் இருக்கிறது.  இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பெறப்படுகின்றன.  விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் http://www.tnhealth.tn.gov.in என்ற இனையதளம் மூலமாக   விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம்  தெரிவித்துள்ளது.