×

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை.. மாதம் ரூ. 63,000 சம்பளம்.. 

 

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது.  இந்த  வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகிற ஜூலை 3 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மொத்த காலிப்பணியிடங்கள் : 79

பணி :  டெக்னீசியன்


துறை வாரியான விவரம் :
1. எலக்ட்ரானிக்ஸ்     - 17
2. எலக்ட்ரிக்கல்ஸ்     - 17
3. இன்ஸ்ட்ரூமெண்டேசன் -  11
4. கம்ப்யூட்டர்     - 11
5. பிட்டர்        - 05
6. சிவில்         - 04
7. வெல்டிங்     - 04
8. மெஷினிஸ்ட்    - 03
9. மெக்கானிக்     - 01
10.டூல் டை மேக்கர்     - 01
11. டீசல் மெக்கானிக்-  01
12. டர்னர்    - 01
13.சீட் மெட்டல்     - 01
14. கிளாஸ் பிளவர்    - 01
15. ஏசி         - 01


மாத ஊதியம்  :  ரூ. 19,000 - ரூ. 63,200

கல்வித்தகுதி  :  10ம் வகுப்பு தேர்ச்சி ( 55% மதிப்பெண்களுடன்) - தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருத்தல் வேண்டும்.  

வயது வரம்பு  :  03.07. 2022ன் படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  03 ஜூலை 2022.

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100/-. டெல்லியில் மாற்றத்தக்க வகையில், Director , National Physical Laboratory  என்கிற பெயருக்கு வங்கி வரைவோலையாக ( டிடி) விணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை..  

தேர்வு செய்யப்படும் முறை :   எழுத்துத் தேர்வு (  Written Exam) மற்றும் ட்ரேடு தேர்வு(trade mark).  

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Controller of Administration,
CSIR - National Physical Laboratory,
Dr. K.S.Krishnan marg,
New Delhi - 110012.

மேலும் விவரங்களுக்கு www.nplindia.org என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும்,  அறிவிப்பு விவரங்களை  https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Advt-3-2022-English.pdf அறியலாம்..