ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து!!
ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டில் வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும், தீபாவளி இனிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஏதுவாக, தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் என அதற்கான பட்டியலும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா , காஜூ பிஸ்தா ரோல், காஜு கத்தலி, ஆவின் ஸ்பெஷல் மிக்சர் போன்ற இனிப்பு, கார வகைகள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது ஆவின் பால் பாக்கெட்டுகளில் தம்பி புகைப்படமும் விளம்பரமும்,இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.