×

தாழ்த்தப்பட்ட சாதி எது? பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி!!

 

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை  வெடித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் , தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை . பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது. 

வினாத்தாள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்துப் பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது.  சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து என் கவனத்திற்கு வரவில்லை அதற்கான உரிய விசாரணை நடத்தப்படும் மற்றும் மறு தேர்வு நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சாதி ஒழிப்பிற்காக அரும்பாடுபட்ட பெரியாரின் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேள்வி எழுந்துள்ளது அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.