×

அடுத்து எப்ப சார் வருவீங்க! லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு விஜயபாஸ்கரின் குழந்தைகள் கேள்வி

 

வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக,சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னை அடையற்றில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடி தலைமையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளோம். அதற்கும் வழக்கு பதிவு செய்யலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம் மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டனர். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். மாதம் ஆயிரம் ரூபாயை கொடுப்பதற்கு வழியில்லை, நிதியும் இல்லை. மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை திசைத்திருப்புவதற்காகவும் எடப்பாடிக்குதுணை நிற்பதற்காகவும் எங்களைப் போன்றோர்களை பழிவாங்குவது அரசினுடைய கால் புணர்ச்சி. மறுபடியும் இப்போது வேண்டுமானாலும் வரலாம் அதனை எதிர்கொள்வதற்கு சட்டப்படி தயாராக உள்ளோம். 

என்னுடைய ஆதார் கார்டு மனைவியின் ஆதார் கார்டு பிள்ளையின் ஆதார் கார்டு மாமாவின் ஆதார் கார்டு அப்பாவின் ஆதார் கார்டு ஓட்டுனர் உரிமம் என மிக முக்கியமான ஆவணங்கள் கடுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து கிளம்பும்போது கூட என் என் பிள்ளை அடுத்த முறை எப்போது வருவீர்கள் என்று கேட்டு கிண்டல் அடித்தனர். நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும். திமுக அரசு வேண்டாம் என மக்கள் முழுமையாக முடிவெடுத்து விட்டனர்” எனக் கூறினார்.