×

3 வருசம் என்ன செஞ்சீங்க? நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு  நீதிபதி கேள்வி

 

 சம்பள பாக்கியை தர வேண்டுமென்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கின் விசாரணையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன் திடீரென்று மனுத் தாக்கல் செய்துள்ளீர்கள் என்று சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

 ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் மிஸ்டர் லோக்கல்.   இப்படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில் நாலு கோடி ரூபாய் சம்பளம் நிலுவையில்இருந்திருக்கிறது. இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்  சிவகார்த்திகேயன் தனக்கு வேண்டிய வழங்க வேண்டிய தொகை வரும்வரைக்கும் ஞானவேல்ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

 இதையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த படத்தின் இயக்குனராக ராஜேஸ் தான் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தி அவரை வைத்து தயாரித்த தாகவும் அதனால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

 மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்துள்ளது .  2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் என்றும்,  விநியோகஸ்தர்கள் பிரச்சனையில் சிக்க வைத்துவிட வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயன் கேட்டதாகவும்,  ஆனால் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தொடுத்திருக்கும் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஞானவேல்ராஜா பதில் மனுவில் தெரிவித்து இருக்கிறார்.

 இந்த வழக்கு மீண்டும் இன்றைக்கு விசாரணைக்கு வந்தபோது ஞானவேல்ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பணத்தை வழங்குமாறு சிவகார்த்திகேயன் இப்போது பணம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.   டிடிஎஸ் தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.   இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுதாக்கல் செய்துள்ளீர்கள்? விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்று சிவகார்த்திகேயன் தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.