வைரமுத்து பகிர்ந்த வீடியோ... ’’நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே..’’
Oct 13, 2022, 09:35 IST
தனக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை சொல்லி நெகிழ்கிறார் நடிகை சம்யுக்தா. அந்த வீடியோவை வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்து உள்ளார்.
கவிஞர் வைரமுத்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உடன் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களில் உள்ள வரிகளை சொல்லி நெகிழ்கிறார் நடிகை சம்யுக்தா. பேட்டி ஒன்றில் அவர் இதை பதிவு செய்து இருக்கிறார். இது குறித்த வீடியோவை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,
மலையாளம்
நனைந்த தமிழில்
என் பாட்டு வரிகளை
நீ சொல்லச் சொல்லப்
பரவசமானேன் மகளே
தமிழும் மலையாளமும்
உறவு மொழிகள்
நாம்
கலையால் ஒன்றுபடுவோம்;
காலத்தை வென்றுவிடுவோம்
-என்று பதிவிட்டு இருக்கிறார்.