×

மக்களே அரிய வாய்ப்பு! தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்

 

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி தான். தடுப்பூசியின் காரணமாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 50,000 ஆயிரம் இடங்களில் இன்று 37வது தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னையில் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்கள், மாலை 7 மணி வரை நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.