×

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. 

 


தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கை விடுத்திருந்தார்.   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி  அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய  மற்றும்  பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய  சமூகங்களில் ஒன்று என்றும்,  பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும்  நலத்திட்டங்களை தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.  ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அர்ஜுன் முண்டா தகவல் தெரிவித்துள்ளார்.