×

#BREAKING தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு ஈபிஎஸ் நந்தனத்தில் மரியாதை செலுத்துகிறார்.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், "தேவர் திருமகனாரின் 115-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் சுழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது. 


அதேபோல் மற்றொரு அறிக்கையில், "தேவர் திருமகளாரின் 115-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் 60-ஆவது குருபூஜையை முன்னிட்டு, 30.10.2022 - ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கீழ்க்கண்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.LA, திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., திரு. செல்லூர் K. ராஜூ, M.L.A., திரு. R. காமராஜ், M.L.A., திரு. O.S. மணியன், M.L.A., டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., திரு. கடம்பூர் C. ராஜூ, M.L.A., திரு. R.B. உதயகுமார், M.L.A., திரு. K.T. ராஜேந்திரபாலாஜி, திரு. V. கருப்பசாமி பாண்டியன், Ex. M.L.A., திரு. V.V. ராஜன் செல்லப்பா, M.L.A., திரு. இசக்கி சுப்பையா, M.L.A., திருமதி கீர்த்திகா முனியசாமி, திரு. R. முருகையாபாண்டியன், Ex. M.L.A., திரு. G. பாஸ்கரன், டாக்டர் M. மணிகண்டன், திரு. M.A. முனியசாமி, திரு. தச்சை N. கணேசராஜா, திரு. PR. செந்தில்நாதன், M.L.A., திரு. C. கிருஷ்ணமுரளி, M.L.A., திரு. R.K. ரவிச்சந்திரன், திரு. P.K. வைரமுத்து ஆகியோர், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.