×

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு- 2.11 லட்சம் பேர் விண்ணப்பம்

 

பொறியியல் கலந்தாய்வுக்கு ஜூன் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாளிலேயே 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். 

ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதன்படி கடந்த 22ம் தேதி சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்றுடன் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. அதன்படி இன்று மாலை நிலவரப்படி,  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்விற்கு  2 லட்சத்து 11 ஆயிரம் பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். 

விண்ணப்பித்தவர்களில் 1,67,387 பேர் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 1,56,214 தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பப்பதிவு செய்தவர்கள் கல்ந்தாய்வு கட்டணத்தை செலுத்தவும், சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் கூடுதலாக இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.