×

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் - முக்கிய அறிவிப்பு இதோ!!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்ரா பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் . தற்போது கொரோனா குறைந்து வரும்  காரணத்தால் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய கிரிவலம் நாளை 1:47 மணிக்கு நிறைவு பெறுகிறது.

சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டணமில்லா இலவச தரிசனம்,  50 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் ஆகியவை பக்தர்களுக்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்பதால் சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளில் அமர்வு தரிசனமும் , முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின்  அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறநிலைத் துறை தெரிவித்துள்ளது.