×

பாஜக கூட்டணியை அதிமுக கழற்றிவிடுவது வரவேற்கதக்கது- திருமாவளவன்

 

மத்தியில்  காங்கிரஸ் , பா.ஜ.க என யார் ஆண்டாளும் ஈழத்தமிழர்களை பொறுத்த வரை ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்‌.திருமாளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ராஜீவ் கொலை வழக்கில் 6 பேர் அண்மையில் விடுதலை ஆகியுள்ளனர் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தான் விடுதலை செய்துள்ளது. ஆளுனர் நடவடிக்கை எடுக்கவில்லை சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவார். இந்நிலையில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எதிர் பார்த்த ஒன்றுதான்  இதை சட்ட பூர்வமாக அவர்கள் எதிர்கொள்வார்கள். மத்தியில் காங்கிரஸ் , பா.ஜ.க எது ஆண்டாளும் ஈழத்தமிழர்கள் பொறுத்த வரை ஒரே நிலைபாட்டை தான் கொண்டுள்ளனர்.

பா.ஜ.க தொடர்ந்து  இரண்டு‌முறை ஆட்சிக்கு வந்தும் ஒரு அங்குலம் கூட ஈழத்தமிழர்கள் நலன்களில் முன்னேற்றம் இல்லை எனவும்,நலன்களை கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை. இன்னும் இந்தியா கடல் எல்லைக்குள் தமிழ்நாட்டின் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க முடியவில்லை. இந்திய கடற்படையினரும் துப்பாக்கியால் சுடுகின்றனர். இலங்கை கடற்படையினரும் துப்பாக்கியால் சுடுகின்றனர் இந்த அவலம் தான் நீடிக்கிறது. எனவே  6 பேர் விடுதலை தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்தாலும்  அவர்கள் விடுதலை செல்லும் என மறுபடியும் உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தும் என நான் நம்புகிறேன். 

 கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் .  பாலியல் துன்புறுத்தல் , பாலியல் வன்கொடுமைகள் மேலும் நடக்காமல் இருக்க சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்க்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அதிமுக சுயமாக இருக்க வேண்டும் பாஜகவுடன் இணைய கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மண்ணில் சமூக நீதியை காப்பாற்ற முடியும். அண்மையில்  எடப்பாடி பழனிச்சாமி  பா.ஜ.கவுடன்  அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்ற பொருளில் கருத்து ஒன்றை தெரிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. அவருடைய பேச்சு வரவேற்கத்தக்க பேச்சு” என்றார்.