×

பாஜக பேரணியை எதிர்க்கவில்லை; ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம்- திருமாவளவன்

 

காந்தியை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதிய, பாலின பாகுபாடுகளை உண்டாக்கும் இயக்கம் தான் ஆர். எஸ்.எஸ். இருமுறை தடைசெய்யப்பட்ட இயக்கம். காந்தியை கொன்ற இயக்கம், காமராஜரை கொலை செய்ய முயன்ற இயக்கம். பாபர் மசூதி இடித்த இயக்கம், குஜராத் படுகொலை நடத்திய இயக்கம். ஜிகாத், கர்வாசி என்றும் ஹோலி, கவ் பசு என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லீம் கிறிஸ்தவ வெறுப்பை விதைத்த இயக்கம். 

இந்தியர்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்களை பிளவுபடுத்துகிற இயக்கம். சமுக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். ஆகவே தமிழ்நாட்டில் இது ஆபத்தான இயக்கம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒர் அரசியல் பிரிவுதான் பாஜக.பாஜக பேரணி நடத்தினால் எதிர்க்க மாட்டோம். ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த வேண்டிய அவசிய தேவை என்ன? கடந்த முறை பேரணி  நடத்த 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது மனித சங்கிலி அறப்போர் நடத்தினோம். பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் பதிலளிக்க முடியாததால் வீதிகளில் நடத்தாமல் வளாகத்திற்குள் நடத்த அனுமதி வழங்கியது” எனக் கூறினார்.