×

பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம்- திருமாவளவன்

 

பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம், மற்ற கட்சிகள் செய்கிறதோ இல்லையோ அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனங்கல் மாளிகை அருகில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில், மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு, இந்து திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு ஆகியவை மற்றும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜி பனையூர் பாலு மற்றும் கொட்டும் மழையிலும் கொடைகள் பிடித்தபடி  500-க்கும் மேற்பட்ட கட்சி முக்கிய நிர்வாகி முதல் தொண்டர்கள் வரை என அனைவரும் கலந்து கொண்டனர். 

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, தமிழ் மொழியானது தேசிய மொழி அது பிராந்திய மொழி என யாராவது கூறினால் அவருடைய கன்னத்தில் அறைந்து அது தேசிய மொழி என உரக்கூறு. பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம் மற்ற கட்சிகள் செய்கிறதோ, இல்லையோ அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும். பன்முகத்தன்மை உள்ள இந்தியாவை ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கின்ற நோக்கத்தில் செயல்படுகிற பாஜக ஏன்?

இந்து மதத்தில் இருக்கக்கூடிய பல கலாச்சாரங்களை ஒரே கலாச்சாரமாக கொண்டு வரக்கூடாது? இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் வீரவேல் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசை பாராட்டுகிறோம், அதோடு நில்லாமல் அவர்களை கைது செய்து நமது தைரியத்தை நாம் வெளி காட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றேன். நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். சனாதனக் கொள்கையை தூக்கி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்த நாம் எடுத்திருக்கும் அடுத்த கட்ட முயற்சிதான் மனுஸ்மிருதி புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது. இந்தியாவிலேயே ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி” எனக் கூறினார்.