×

72 மாணவர்களை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் பணியிட நீக்கம்

 

72 பள்ளி மாணவர்களை பிரம்பால் தாக்கிய விழுப்புரம் ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில்  சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தேர்வு எழுதுவதற்காக பள்ளி மைதானத்தில் அமர்ந்திருந்த 73 மாணவர்களையும் தேர்வை சீக்கிரம் எழுதுமாறு கூறி, பிரம்பால் முதுகில் பலமாக தாக்கியதால் காயங்களுடன் மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். 

இதனையறிந்த பெற்றோர்கள் இன்று காலை அரசு பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபாலை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா  பணியிடை நீக்கம் செய்தார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களிடம் பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வரும்  சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது