×

#JUSTIN "கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை" - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

 

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  2,537 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து ஓராயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 804 பேருக்கு தொற்று உறுதியாகிய நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்காத நிலையில்  பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. 

இந்த சூழலில் நேற்று 31 வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 17 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்தது. அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட  94.68 %  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 85.47% பேருக்கு தடுப்பூசி தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.  



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது  ட்விட்டர் பக்கத்தில் , "நேற்று நடைபெற்ற #COVID19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.