தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவரே, தேசியக்கொடியினை ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இது தொடர்பான வீடியாக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
சுதந்திர தின விழா நாடெங்கிலும் விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, தேசியக்கொடியை பள்ளியின் தலமை ஆசிரியை ஏற்ற மறுத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஆசிரியரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இது குறித்து சம்மந்தபட்ட தலமை ஆசிரியரிடம் கேட்ட போது தான், யகோபாவின் சாட்சி என்ற கிருஸ்த்துவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும், தாங்கள் தங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், தங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே, தேசியக்கொடிக்கும், தேசியக்கொடிக்கும் மரியாதை தருகிறோம், குறிப்பாக தேசியக்கொடியை அவமதிக்கவில்லை, இந்த பள்ளியில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிவதாகவும், நான்கு ஆண்டுகளுமே தான் தேசியக்கொடியை ஏற்றவில்லை பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்களால் தேசியக்கொடி ஏற்றபட்டது என தெரிவித்திருக்கிறார்.