×

தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி 

 

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் UPSC, TNPSC, பிற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு நிர்வாக மறு கட்டமைப்பு குறித்தும் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இந்நிலையில் அரசு ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முன் அனுமதி கோரும்போது முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது கவனத்திற்கு தெரிய வருகிறது.

அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.