×

அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்

 

சென்னை டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கூறிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை டிபிஐ  வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் பொதுநல மனுவாக இதை தாக்கல் செய்திருந்தார்.  பள்ளி கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டிபிஐ  வளாகத்தில் அன்பழகனின் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 சாலைகள்,  நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்க கூடாது என உச்ச நீதிமன்றமும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.  மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தலைவர்களின் சிலைகளை அமைக்கும்.  இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.  எனவே டிபிஐ  வளாகத்தில் அன்பழகன் சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். 

இந்நிலையில்  சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கூறிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  வழக்கு திரும்ப பெறப்பட்டதால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.