×

4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!!

 

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு நாளும் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 29ம் தேதி மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.  இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கடந்த 30ம் தேதி சனிக்கிழமை முதல் சட்டப்பேரவைக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக  சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுமுதல் மீண்டும் கூடியுள்ளது.  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய  அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் சேகர் பாபு,  மனோ தங்கராஜ் ஆகியோர் சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. 

அதேபோல்   6ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,  7ம் தேதி திட்டம் , வளர்ச்சி , பொது சிறப்பு திட்ட செயலாக்கம் , நிதி மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது . மே 9 மற்றும் 10ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் முதலமைச்சரின் துறையான காவல் மானிய கோரிக்கை மீதான விவாதம்,  தீயணைப்புத் துறை , மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

!