×

மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!! 

 

தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் நிரப்ப தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில்,  20 சதவீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை  காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில்  182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி,மொழிபெயர்ப்பு பணி,மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்துகொள்ளலாம் என்றும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது