×

#Justin  ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு!

 

மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 554 அரசு பள்ளிகளில்,  52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.    கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் வருகைப்பதிவை கண்காணிக்க  ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது. 

இதன் வழியாக ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை பதிவும் மேற்கொள்ளப்பட்டது.  கடந்த ஆண்டு விவரங்களை ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை  தமிழக அரசு அறிமுகம் செய்தது.  வருகைப்பதிவு  உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதை நேரடியாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வருகை பதிவு  இன்று முதல் செயலில் மட்டுமே பதிவு செய்தால் போதுமானது  என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,தங்களது வருகைப் பதிவை, பள்ளிக் கல்வித்துறையின் TANSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.