×

தமிழை வளர்ப்பது ஆன்மிகம் தான் - தமிழிசை சௌந்தரராஜன்

 

தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழ்வழி கல்வியை ஊக்கப்படுத்துவது கிடையாது எனவும் தமிழை வளர்ப்பது ஆன்மிகம் தான் எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துளார். 

வள்ளலாரின் 200வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., ஜான்குமார், மலேசிய சன்மார்க்க சங்கத் தலைவர் செல்வமாதரசி, புதுச்சேரி சங்கத் தலைவர் கணேசன், பொருளாளர் கஜபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜ தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாநாட்டில் 101 வயது சன்மார்க்க தொண்டருக்கு விருது வழங்கப்பட்டது. 

மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் விழா மேடையில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜ கூறியதாவது: இறைவனை இகழ்ந்து பேசுவது நாகரிகம் என பல பேர் எண்ணிக் கொண்டுள்ளனர். தமிழை வளர்ப்பது ஆன்மிகம் தான் .தமிழ், தமிழ் என பேசுபவர்கள் கூட, தமிழ்வழி கல்வியை ஊக்கப்படுத்துவது கிடையாது. ஆனால்,தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது' என குறிப்பிட்டார்