×

இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு... ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மின்னணு சாதனமான ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் எளிதாக  பணம் எடுத்துக்கொள்ளலாம். பணம் வைப்பது, பெறுவது, கணக்கை பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே  செய்ய ஏதுவாக கணினி மயமாக்கப்பட்ட ஒரு இயந்திரமாக ஏடிஎம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. வழக்கமாக வங்கிக்கு சென்று, காசோலை மூலம்  பணத்தை பெற்று  வந்த சூழலில், தற்போது வங்கிகளுக்கு செல்லாமல் ஏடிஎம் மூலமாகவே பணத்தை பெற்று வாடிக்கையாளர்கள் தங்கள் பணியை மேலும் எளிதாக்கி கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏடிஎம் என்பது நமக்கு கிடைத்தமிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டிசம்பர் 2021இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.   ரிசர்வ்  வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி,  தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும் , உத்தரப்பிரதேசம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் 27 ஆயிரத்து 945 ஏடிஎம்களும், உத்தரபிரதேசத்தில் 23 ஆயிரத்து 460 இயக்கங்களும் உள்ளதாக ஆர்பிஐ  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.