×

வரும் 8ம் தேதி முதல் தினசரி திருப்பதி சுற்றுலா - சுற்றுலாத்துறை அறிவிப்பு!

 

திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வரும் 8ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் வழிக்காட்டுதலின் படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் சென்னையிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவினை பொது மக்களின் பேராதரவோடு மிக சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வருகிறது. இச்சுற்றுலாவினை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்து இதன் தொடர்ச்சியாக திருச்சி, மதுரை, சேலம் மற்றும்கோயம்புத்தூர் போன்ற இடங்களிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வருகின்ற 08.08.2022 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன பயணச்சீட்டு உட்பட கட்டணமாக திருச்சி - பெரியவர்கள் ரூ.3,300/- சிறியவர்கள் ரூ.3,000/சேலம் - பெரியவர்கள் ரூ.3,300/- சிறியவர்கள் ரூ.3,000/ மதுரை- பெரியவர்கள் ரூ.4,000/- சிறியவர்கள் ரூ.3,700/ கோயம்புத்தூர் - பெரியவர்கள் ரூ.4,000/- சிறியவர்கள் ரூ.3,700/ (4வயதிலிருந்து 10 வயதிற்கு உட்பட்டோர்க்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சுற்றுலாவில் பயணம்செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இச்சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு: மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு - திருச்சி 0431-2414346, 9176995862 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு - சேலம் 04281-22335, 223334, 9176995823
மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு - மதுரை 0452-2337471, 9176995822 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு - கோயம்புத்தூர் 0422-2302176, 9176995852 " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.