×

சிராவயல் ஜல்லிக்கட்டு- பார்வையாளர் ஒருவர் பலி 

 

சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

சிவகங்கை மாவட்டம் சிராவயவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ, ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் முன்னிலையில் போட்டிகள் வீரர்களின் உறுதி மொழியுடன் தொடங்கியது. முன்னதாக கிராம தெய்வங்களை ஊர்வலமாக சென்று வணங்கிய கிராமத்தினருக்கு தேனாட்சி அம்மன் கோவில் முன்பு பாரம்பரிய வழக்கப்படி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செய்தார்.

250 காளைகளும் 150 வீரர்களும் பதிவு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் விட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பூமிநாதன் கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்ட பகுதியில் மாடு குத்தியதால் பலத்த காயமடைந்து முதலுதவிக்கு பின் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அமைதிக்கபட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.