×

அடக்கொடுமையே... மதுப்பிரியர்களுக்கு மேலும் ஒரு ஷாக் செய்தி...! 

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நான்கு நாட்களாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஆழ்ந்த வருத்ததில் இருக்கிறார்கள். இச்சூழலில் செங்கல்பட்டு மதுப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் செய்தி வந்திருக்கிறது. ஆம் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஐந்து டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பழைய ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு-தாம்பரம் செல்லும் ரயில்வே பாலத்திற்கு அருகே கடையும் அடக்கம். 

இந்த டாஸ்மாக் கடை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தலின் காரணமாக கடை பூட்டப்பட்டிருந்த இச்சூழலில் நேற்று அதிகாலை திடீரென டாஸ்மாக்கிலிருந்து புகை கிளம்பியுள்ளது. உள்ளே பற்றி எரிவதும் தெரிந்திருக்கிறது. உடனே அங்கிருந்தவர்கள் செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் தீயணைப்பு துறையினருடன் உடனே அங்கு விரைந்தனர்.

 

மேலும் ஒரு மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் (ஃபிரிட்ஜ்) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அந்த தீயானது அப்படியே பரவி கடை முழுவதையும் மளமளவென பற்றி எரிய வைத்துள்ளது. மேலும் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.