×

நியாயவிலைக் கடையில் அரிசிக்கு தனித்தனி ரசீது!

 

நியாய விலை கடைகளில் மத்திய,  மாநில அரசுகளின் அரிசுக்கு தனித்தனி ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து நியாயவிலை கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பொழுது புதிய முறைப்படி அரிசியினை  மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முதல் ரசீது ஆகவும்,  அரிசி மற்றும் இதர பொருட்களை இரண்டாவது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் பதிவு செய்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய நடைமுறை நடைமுறையை பின்பற்ற உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.  20 கிலோ அரிசி வாங்கினால் அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோவுக்கு தனி ரசீதும்,  மாநில அரசு வழங்கும்  5 கிலோ அரிசிக்கு தனி ரசீதும் வழங்க வேண்டும்.  விதிமுறையை கடைபிடிக்காமல் விநியோகித்தால் அதற்கு உண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே  செலுத்த வேண்டும் என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.