×

மோடியை எதிர்க்க ராகுல் சரியானவர் இல்லை- சீமான்

 

ராகுல்காந்தியால் 50 ஆண்டுகள் செய்யாததை 5 மாத நடையணத்தில் செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விக்டோரியா எட்வர்ட் ஹாலில் பல்வேறு முறைகள் நடப்பதாக கூறி அதனை ஆய்வு செய்ய போவதாக நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததை தொடர்ந்து எட்வர்டு ஹாலில் பராமரிப்பு  பணி நடப்பதாக கூறி அதன் நிர்வாகி பூட்டி சென்று விட்டார். 

இதையடுத்து விக்டோரிய எட்வர்டு மன்றம் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  “விக்டோரிய எட்வர்டு மன்றம் மன்றம் பொது சொத்து. இங்கு  நூலகம் ,அரங்க கூட்டம் உள்ளது.கடைகளுக்கு  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தனியார் ஒருவர் இதனை கையகபடுத்தி கொண்டு இருக்கிறார், முறையான கணக்கு இல்லை ஆகவே அரசே இடைகால நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும். இந்த இடம் பார்ப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது, ஏன் கதவை முடுகிறீர்கள். இதற்கு நியமான தீர்வு வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம். மீண்டும் வந்து பார்ப்பேன். ராகுல்காந்தியால் 50 ஆண்டுகள் செய்யாததை 5 மாத நடையணத்தில் செய்ய முடியாது. தினமும் காலை மாலை நடைபயிற்சி செய்கிறார். இதில் என்ன தேச ஒற்றுமை வரும். மோடியை எதிர்க்க ராகுல் சரியானவர் இல்லை. அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி  தனித்து போட்டியிட இருக்கிறோம்” எனக் கூறினார்.