×

கொலை  எண்ணிக்கையை காவல் துறை குறைத்து காட்டுகிறது- சீமான்

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் போராட்டம் வெடிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சீமான், “கொலை  எண்ணிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியே குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொலை, கொள்ளை குற்றங்களை குறைக்க முடியும். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். நான்கு மாதங்கள் ஆகியும் அறிக்கையை அரசு வெளியிடாத காரணத்தால் தற்போது கசிய விடப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வேறு இடத்தில் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடியில் வடநாட்டு மார்வாடி அனில் அகர்வாலின் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது 2019 மே 22 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அமர்த்திய நீதிபதி அருணா செகதீசன் அறிக்கை கடந்த 18.05.2022 ஆம் தேதி தி.மு.க. அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு அமைதிகாத்துவருகிறது.