×

சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 

தென்மேற்கு வங்கக்கடலில்  கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் வலுவடையும்   இதன் காரணமாக  திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இலங்கை கடற்கரையை ஒட்டி வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.11.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதேபோல் சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7செ.மீ, சோழவரத்தில் 6செ.மீ, செங்குன்றத்தில் 5செமீ மழை பொழிந்துள்ளது. காலை முதலே பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடதக்கது.