×

காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

தென்மேற்கு வங்கக்கடலில்  கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் வலுவடையும்   இதன் காரணமாக திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

குறிப்பாக திருச்சி, தஞ்சை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது, இந்தக் காற்றழுத்த தாழ்வு  கடலூருக்கும் பாம்பனுக்கும்  மேலையே கரை கடக்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (12-11-22)கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12.11.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.