×

பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்- சசிகலா

 

பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்- சசிகலாநீட் தேர்விற்கு மரணம் தீர்வாகாது, அது மட்டுமல்லாது பெண்களுக்காக போராடிய பெரியார் பிறந்த தினத்தன்று கூறுகிறேன், பெண்களுக்கு மன தைரியம் வேண்டும் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு வி கே சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பெரியார் திருவுருவப்படத்திற்கு  மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “பெண்கள் சம உரிமை வேண்டும் என்பதற்காக போராடியவர் பெரியார், எங்களுடைய தலைவர்களும் அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதை செய்து காட்டியவர்கள் என்ற அவர், ஓபிஎஸ் தன் பக்கம் உள்ள நியாயமான இடத்திற்காக நீதிமன்றம் சென்று இருக்கிறார் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களது தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்தாக தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் இந்த இயக்கத்திற்கு பொதுச் செயலாளராக வர முடியும். பொதுச்செயலாளர் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கருத்து சொல்ல முடியாது. ஆவின் விலையேற்றம், மின் கட்டண உயர்வு  இதெல்லாம், இது திமுக அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம் அல்ல என்பதை நிரூப்பிக்கிறது. 

தீபாவளி அன்று ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்குவது தான் நம் பண்பாடு ,அதை கூட செய்யமுடியாத அளவில் மக்களை வஞ்சித்து வருகிறது இந்த திமுக அரசு. மேலும், ஆவின் பாலை மட்டுமே விற்பனை செய்து வந்தால் மட்டுமே போதுமானது. ஆவின் பொருட்களின் விலையை ஏற்றி தீபாவளிக்கு கூட இனிப்பு வழங்குவதை செய்யமுடியாமல் இருக்ககும் நிலைக்கு இந்த அரசு மக்களை தள்ளியுள்ளது. தனியார் இனிப்பு கடைகள் விலையேற்றுவது போல் ,மக்களுக்காக செயல்படும் அரசும் ஆவின் பொருட்களின் விலையை ஏற்றினால் அது நல்லதாக இருக்காது. நீட் தேர்விற்கு மரணம் தீர்வாகாது, அது மட்டுமல்லாது பெண்களுக்காக போராடிய பெரியார் பிறந்த தினத்தன்று கூறுகிறேன், பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்” என தெரிவித்தார்.