×

#BREAKING நவ.24 முதல் ரூ.1000 மழை நிவாரணத் தொகை- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

 

நவ.24 முதல் ரூ.1000 மழை நிவாரணத் தொகை வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக  குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மழை ஓய்ந்து 11 நாட்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், அறிவித்த பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் எனக் கூறி சீர்காழியில் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 நிவாரண உதவி தொகை நவம்பர் 24-ஆம் தேதி முதல் அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளில் 1,61 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.