×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க மறுப்பு!!

 

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார்.  இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை வாங்க மறுத்த அவரது பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மகளின் உடலை மறுப்பு பிரத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தனர்.  தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில்.  மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேத பரிசோதனை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் மாணவி உடலுக்கு மறு கூறாய்வு செய்யும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இக்கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனையை  தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் 3 மருத்துவர்கள் குழு மூலம் நடத்தக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்துள்ள நிலையில் வழக்கு நாளை பட்டியலிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம்  உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் என்றும் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.